அடைமொழியால் குறிக்கப்படும் சான்றோர்
தேசிய கவி, சிந்துக்குத் தந்தை, விடுதலைக்கவி, மகாகவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக்கவி, கற்பூரச்சொற்கோ, தற்கால தமிழ் இலக்கிய விடிவெள்ளி
ஷெல்லி தாசன், செந்தமிழ்த் தேனீ, பைந்தமிழ்த் தேர்ப்பாகன், நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா- பாரதியார்பாவேந்தர், புரட்சிக்கவி, புதுவைக் கவிஞர், பகுத்தறிவுக் கவிஞர்,
இயற்கை கவிஞர், புதுவைக்குயில், தமிழ்நாட்டின் ரசூல் கம்சத்தேவ்,
பூங்காட்டுத் தும்பி - பாரதிதாசன்
சிந்துக்குத் தந்தை (காவடி சிந்து நூல்),அண்ணாமலை கவிராயர் - அண்ணாமலை
காந்தீயக் கவிஞர் - நாமக்கல் கவிஞர்
சென்னையில் தமிழ்சங்கம் நிறுவியவர் -வேங்கட ராஜூலு ரெட்டியார்
உலகம் சுற்றிய முதல் தமிழ் அறிஞர் - மு.வரதராசனார்
சிலம்பு செல்வர் - ம.பொ.சிவஞானம்
சொல்லின் செல்வர் - ரா.பி.சேதுப்பிள்ளை
சொல்லின் செல்வன் - அனுமன்
தமிழ் தென்றல் - திரு.வி.க.
வள்ளலார் - ராமலிங்க அடிகளார்
கிருத்துவக் கம்பன் எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை
தனது கல்லறையில் தன்னை ஓர் தமிழ் மாணாக்கன் என எழுத சொன்னவர் - ஜி.யூ.போப்.
ஆசு கவி - காளமேகப் புலவர்.
எழுத்துக்கு - இளம்பூரணார்.
சொல்லுக்கு - சேனாவரையார்.
உரையாசிரியர் - இளம்பூரணார்.
உச்சிமேல் புலவர் கொள் - நச்சினார்க்கினியர்
தமிழ் வியாசர் - நாதமுனிகள் (அ) நம்பியார் நம்பி.
புதினப் பேரரசு - கோ.வி.மணிசேகரன்
ஏழிசை மன்னர் - தியாகராய பாகவதர்
மொழி ஞாயிறு - தேவநேயப் பாவாணர்
கவிக்கோ - அப்துல் ரஹ்மான்
தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - கல்கி
தமிழ் முனி, குருமுனி, குறுமுனி, பொதிகை முனி - அகத்தியர்
தொண்டர் சீர் பரவுவார், பக்தி சுவைநனி சொட்ட சொட்ட பாடிய கவி,
உத்தம சோழ பல்லவராயன்,இராமதேவர் (கல்வெட்டுகள்),அருண்மொழித் தேவர் - சேக்கிழார்
இலக்கண தாத்தா - மே.வி.வேணுகோபால்
முத்தமிழ்க்காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை
சிறுகதையின் மன்னன், தமிழ்நாட்டின் மாப்பசான்
-புதுமைப்பித்தன்
தென்னாட்டு மாப்பசான், சிறுகதையின் சித்தன், சிறுகதையின் முடிசூடா மன்னன் - ஜெயகாந்தன்
தென்னாட்டு பெர்னாட்ஷா, பேரறிஞர், தென்னாட்டு காந்தி - அண்ணாதுரை
தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்
புதுக்கவிதையின் முன்னோடி, தமிழில் புதுக்கவிதை தோற்றுவித்தவர் - ந.பிச்சமூர்த்தி
தமிழ் தாத்தா - உ.வே.சா
தமிழ் நாடகத் தந்தை - சம்பந்த முதலியார்
தமிழ் நாடக தலைமையாசிரியர் ,நாடக உலகின் இமயம் - சங்கரதாஸ சுவாமிகள்
உவமைக் கவிஞர் - சுரதா
தெற்காசிய சாக்ரடீஸ் - பெரியார்
தமிழ் உரைநடையின் தந்தை, தமிழ் இலக்கிய தோற்றுனர் - வீரமாமுனிவர்
குற்றியலுகர ஒலியை முதலில் உவமையாக எடுத்தாண்டவர்,தமிழ்நாட்டின் ‘வேர்டு ஸ்வர்த்’, பாவலர் மணி, பாவலர் மன்னன்,
பிரெஞ்ச் நாட்டின் ‘செவாலியே’, தமிழ் நாட்டின் தாகூர், கவிஞரேறு- வாணிதாசன்.
கவி யோகி - சுத்தானந்த பாரதி.
தற்கால உரைநடையின் தந்தை - ஆறுமுக நாவலர்.
தனித் தமிழ் இலக்கியத்தின் தந்தை - மறைமலைஅடிகள்
வில்லுப் பாட்டுக்காரர் - கொத்தமங்கலம் சுப்பு.
ஆசிய ஜோதி - நேரு
ஆசிய ஜோதி நூலை எழுதியவர் - கவிமணி
மூல நூலை எழுதியவர் - எட்வின் அர்னால்ட்
திருவாதவூரர், தென்னவன், உத்தம சீலன் - மாணிக்கவாசகர்
தமிழ்நாட்டின் அட்லி சேஸ் - சுஜாதா
தென்னாட்டு தாகூர் - வெங்கட ரமணீ
பண்டித மணி - கதிரேசன் செட்டியார்
சிவபெருமானால் அம்மையே என அழைக்கப்பட்டவர், பேயார் - காரைக்கால் அம்மையார்
வெண்பா பாடுவதில் வல்லவர் - புகழேந்தி
பிள்ளைத் தமிழ் இலக்கிய முன்னோடி - பெரியாழ்வார்
தமிழில் முதல் இலக்கிய ஞானபீடவிருது. - அகிலன் (சித்திரப்பாவை)
தமிழில் உபநிடதங்கள் படைத்தவர் - தாயுமானவர்
கவிராட்சசன் - ஓட்டக்கூத்தர்
திவ்ய கவி, அழகிய மணவாளர் தாசர் ,தெய்வக் கவி
- பிள்ளைப் பெருமாள் (ஐயங்கார்)
நாட்டுப்புறவியலின் தந்தை - ஜேக்கப் கரீம்.
தமிழ் நாட்டுப்புறவியலின் தந்தை - வானமா மாலை.
மண் தோய்ந்த புகழினான் - கோவலன்
வீடு வீடாக பிச்சையெடுத்த தமிழ் தொண்டு செய்தவர் - ஆறுமுக நாவலர்
பொய்யா குலக்கொடி நதி - வைகை
கணக்காயர் என்பவர் - சோமசுந்தர பாரதியார்
நீதி நாயகர் - வேதநாயகம் பிள்ளை
கம்பரை ஆதரித்த வள்ளல் - சடையப்ப வள்ளல்
முச்சங்கம் வளர்கூடல் நகர் - மதுரை
தமிழ் நந்தி - மூன்றாம் நந்தி வர்மன்
தண்டமிழ் ஆசான், நன்னூல் புலவன், கூலவாணிகன் - சீத்தலைச் சாத்தனார்
நற்றமிழ்ப் புலவர், மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் - நக்கீரர்
தமிழ் கவிஞருள் அரசர் - திருத்தக்கதேவர்
தமிழ் வேதம் செய்த மாறன், குருகைக் காவலன், பராங்குசன், சடகோபன் - நம்மாழ்வார்
சூடிக்கொடுத்த சுடர்கொடி, வைணவம் தந்த செல்வி - ஆண்டாள்
குழந்தை கவிஞர் - அழ.வள்ளியப்பா
மக்கள் கவிஞர் - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரனார்
சைவ சமயத்தின் செல்வி - மங்கையற்கரசியார்
திராவிட ஒப்பிலக்கண தந்தை - கார்டுவெல்
நவீன கம்பர் -மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நாவலர் - சோமசுந்தர பாரதி
இந்திய சினிமா தந்தை - தாதாசாகிப் பால்கே
ஆட்சி மொழிக் காவலர் - ராமலிங்கனார்
ஆஸ்தானக் கவிஞர் - நா.காமராசன்
கவியரசு - வைரமுத்து,கண்ணதாசன்
திருக்குறளார் - வி.முனுசாமி
கவிப்பேரரசு - வைரமுத்து
தசாவதாணி - செய்கு.தம்பியார்
பண்மொழிப் புலவர் -அப்பாதுரை (எ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
நரை முடித்த சொல்லால் முறை செய்த அரசன் - கரிகாலன்
திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன் - முதலாம் ராஜராஜன்
சைவ உலக செஞ்ஞாயிறு, ஆளுடை அரசு, தர்ம சேனர், மருள் நீக்கியார், அப்பர்- திருநாவுக்கரசர்
தோடுடை செவியன், காளி வள்ளல். ஆளுடைப் பிள்ளை, தோணி புறத் தோன்றல், திராவிட சிசு, நாளும் இன்னிசையால் தமிழ் பரப்புவர் - திருஞான சம்பந்தர்
ஆளுடை நம்பி, திருநாவலூரார், நம்பி ஆரூரார்
வன்தொண்டர், தம்பிரான் தோழர் - சுந்தரர்.
நல்லிசைப் புலவர் தமிழ் மூதாட்டி - ஔவையார்
மும்மொழிப் புலவர் - மறைமலை அடிகள்
விஷ்ணுசித்தர் - பெரியாழ்வார்.
தேசியம் காத்த செம்மல் (திரு.வி.க), பிரணவ கேசரி,வேதாந்த பாஸ்கர் -முத்துராமலிங்க தேவர்
திருக்குற்றால நாதர் கோவில் வித்வான் - திரிகூடராசப்ப கவிராயர்
இரட்டைப் புலவர்கள் - இளஞ்சூரியர், முதுசூரியர்