றிவியல் 500 கேள்வி பதில்கள்
நண்பர்களே!இதோ இந்த ஒரே பதிவின் மூலம் அறிவியல் கேள்வி விடைகளை எழுதியள்ளேன்.
இது ஒரு பெரிய்யய பதிவாக இட்டுள்ளேன்.என்னால் முடிந்தவரை தனித்தனி பிரிவுகளாக அழுதியுள்ளேன்.பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.வேதியியல்
* காந்தத் தன்மையற்ற பொருள் - கண்ணாடி
* இரும்பின் தாது - மாக்னடைட்
* பதங்கமாகும் பொருள் - கற்பூரம்
* அணா கடிகாரத்தில் பயன்படும் உலோகம் - சீசியம்
* அறைவெப்ப நிலையில் தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளாதது - கிரிக்கெட் மட்டை
* நீரில் கரையாத பொருள் - கந்தகம்
* நாம் பருகும் சோடா நீரில் உள்ள வாயு - கார்பன் -டை -ஆக்சைடு
* நீரில் கரையாத வாயு எது - நைட்ரஜன்
* பனிக்கட்டி நீராக மாறும் நிகழ்ச்சி - உருகுதல்
* நீரில் சிறிதளவே கரையும் பொருள் - ஸ்டார்ச் மாவு
* மின்காந்தம் பயன்படும் கருவி - அழைப்பு மணி
* வெப்ப கடத்தாப் பொருள் - மரம்
* திரவ நிலையிலுள்ள உலோகம் - பாதரசம்
* ஒளியைத் தடை செய்யும் பொருள் - உலோகத்துண்டு
*இலோசான பொருட்களை கனமான பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - புடைத்தல்
* ஒரு படித்தான தன்மை கொண்டது - தூய பொருட்கள்
* கலவைப் பொருள் என்பது - பால்
*கலவையில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் நிறம், அளவு, வடிவம் ஆகியவை வேறுபட்டால் அவற்றைப் பிரிக்கக் கையாளும் முறை - கையால் தெரிந்து எடுத்தல்
* கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்
* தீயின் எதிரி என அழைக்கப்படுவது - கார்பன் டை ஆக்சைடு
*போலிக் கூரைகள் தயாரிக்கப் பயன்படும் வேதிச் சேர்மம் - பாரிஸ் சாந்து
* அசிட்டிக் அமிலத்தின் நீர்க்கரைசல் - வினிகர்
* கீட்டோன் வரிசையின் முதல் சேர்மம் - அசிட்டோன்
* 40 சதவீத பார்மால்டிஹைடின் நீர்க்கரைசலின் பெயர் - பார்மலின்
* 100 சதவீத மறுசுழற்ச்சி செய்யப்படும் பொருள் - கண்ணாடி
*100 சதவீத தூய எத்தில் ஆல்கஹால் - தனி ஆல்கஹால் என அழைக்கப்படுகிறது.
* பளபளப்புக்கொண்ட அலோகம் - அயோடின்
* மின்சாரத்தைக் கடத்தும் அலோகம் - கிராபைட்
* எப்சம் உப்பின் வேதிப்பெயர் - மெக்னீசியம் சல்பேட்
*செயற்கை இழைகளுக்கு உதாரணம் - பாலியெஸ்டர், நைலான், ரேயான்
* கேண்டி திரவம் என்பது - பொட்டாசியம் பெர்மாங்கனேட்
* மோர்ஸ் உப்பின் வேதிப்பெயர் - சோடியம் சல்பேட்
*அதிக அளவு பொட்டாசி யம் அயோடைடில் கரைக்கப்பட்ட மெர்க்குரிக் அயோடைடு கரைசல் - நெஸ்லர் கரணிஎனப்படும்
*பார்மால்டிஹைடுடன் அம்மோனியா வினைபுரிந்து கிடைக்கும் கரிமச் சேர்மத்தின் பெயர் - யூரோட்ரோபின்.
* சலவைப் பொருட்களின் அயனிப்பகுதி - -SO3- Na+
* சலவை சோடா தயாரிக்கப் பயன்படுவது - சோடியம் கார்பனேட்
*ஒரு எரிபொருள் எரிய தேவைப்படும் குறைந்தபட்ச வெப்பநிலையே - எரிவெப்பநிலை
* எரிசோடா என்ப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
* எரி பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
* நீரில் கரையும் காரங்கள் - அல்கலிகள்
* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
* தூய்மையான நீரின் PH மதிப்பு - 7
* அதிக ஆற்றல் மூலம் கொண்டது - லிப்பிடு
* இயற்கையில் கிடைக்கும் தூய்மையான கார்பன் - வைரம்
*எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
*ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
* வெள்ளை துத்தம் எனப்படுவது - ஜிங்க் சல்பேட் ZnSO4
*உலகில் அதிக வலிமை மிக்க அமிலம் - ஃபுளுரோ சல்பியூரிக் அமிலம் HFSO3
*ஒரு நாட்டின் பொருளாதாரம் அந்த நாட்டில் பயன்படுத்தப்படும் கந்த அமிலத்தைப் பொருத்ததாகும்.*சோடியத்தின் அணு எண் மற்றும் அணு நிறை முறையே 11 மற்றும் 23 ஆகும். அதிலுள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை - 12
* காஸ்டிக் சோடா எனப்படுவது - சோடியம் ஹைட்ராக்சைடு
* அமில நீக்கி என்ப்படுவது - மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
* காஸ்டிக் பொட்டாஷ் எனப்படுவது - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு.
* குளிர் பானங்களின் PH மதிப்பு 3.0
*சிமெண்ட் கெட்டிப்படுவதைத் தாமதப்படுத்த அதனுடன் சேர்க்கப்படுவது - ஜிப்சம்
* குளியல் சோப்பில் கலந்துள்ள காரம் - பொட்டாசியம் ஹைட்ராக்சைடு
* சலவைத்தூள் தயாரிக்க பயன்படும் சாதனம் - பெக்மென் சாதனம்
* கற்பூரம் எரியும் போது உருவாகும் வாயு - கார்பன் டை ஆக்சைடு
*பனிக்கட்டி போன்ற அசிட்டிக் அமிலம் என்பது - 100 சதவீத அசிட்டிக் அமிலம்
*நங்கூரம் மற்றும் குதிரை லாடம் தயாரிக்கப் பயந்படும் இரும்பின் வகை - தேனிரும்பு
* நீர்ம அம்மோனியாவின் பயன் - குளிர்விப்பான்
*பென்சீன் ஆய்வுக்கூடங்களில் கரைப்பானாகப் பயன்படுவது - நைட்ரஜன்
* சோப்புகளில் உப்பாக உள்ள அமிலம் - கொழுப்பு அமிலம்
*இயற்கையில் தனித்துக் கிடைக்கும் தனிமங்களில் மென்மையானது - கிராபைட்
* வெண்ணெயில் காணப்படும் அமிலம் - பியூட்டிரிக் அமிலம்
* ஆற்றல் மிகு ஆல்கஹால் என்பது - தனி ஆல்கஹால் + பெட்ரோல்
*அறை வெப்பநிலையில் நீர்மமாக உள்ள அலோகம் ஒன்றின் பெயர் – புரோமின்
* இராக்கெட் எரிபொருளாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
*எண்ணெயினால் பற்றி எரியக்கூடிய தீயை எதைக் கொண்டு அணைக்க வேண்டும் - நுரைப்பான் (ஃபோம்மைட்)
* ஐஸ் தயாரிக்கும் கலத்தில் குளிர்விப்பானாகப் பயன்படுவது - நீர்ம ஹைட்ரஜன்
* ஒளிச் சேர்க்கை என்பது - வேதியல் மாற்றம்
* இயற்பியல் மாற்றம் - பதங்கமாதல்
* வேதியியல் மாற்றம் - இரும்பு துருப்பிடித்தல்
* பொதுவாக மாசு கலந்த சேர்மத்தின் கொதிநிலை - தூய சேர்மத்தின் கொதிநிலையை விட அதிகம்
* யூரியாவின் உருகு நிலை - 135o C
* இரும்பு துருபிடித்தல் என்பது - ஆக்சிஜனேற்றம்
* இரப்பையில் ஏற்படும் அதிகப்படியானஅமிலத் தன்மையைக் கட்டுப்படுத்தப் பயன்படும் வேதிவினை - நடுநிலையாக்கல்
* இரத்தத்திலுள்ள ஹீமோகுளோபினைப் பாதிக்கக்கூடிய வாயு - கார்பன் மோனாக்சைடு
* புரதச் சேர்க்கையில் பயன்படுவது - நைட்ரஜன்
* நீரேறிய காப்பர் சல்பேட்டின் நிறம் - நீலம்
* எத்தில் ஆல்கஹாலின் கொதிநிலை - 78o C
* கோதுமையிலிருந்து உமியை நீக்கும் முறை - தூற்றுதல்
*நீரும் மணலும் கலந்த கலவையைப் பிரிக்கும் முறை - தெளியவைத்து இறுத்தல்
* ஹைட்ரோகுளோரிக் அம்லம் எக்காரத்துடன் வினைபுரிந்து சோடியம் குளோரைடை உருவாக்குகிறது - சோடியம் ஹைட்ராக்சைடு
* நைட்ரஜனும் ஹைட்ரஜனும் இணைந்து அம்மோனியா உருவாதல் வினையின் பயன்படும் நியதி - உயர் வெப்பநிலை
* கடல் நீரைக் குடி நீராக மாற்ற மேற்ரொள்ளப்படும் செயல்முறை - காய்ச்சிவடித்தல்
* மயில் துத்தம் என்பதன் வேதிப்பெயர் - காப்பர் சல்பேட்
* ரவையில் கலந்தூள்ள இரும்புத்தூளைப் பிரித்தெடுக்கும் முறை - காந்தப்பிரிப்பு முறை
* துரு என்பதன் வேதிப் பெயர் - இரும்பு ஆக்ஸைடு
இயற்பியல்
* ஒரு பொருள்களின் மீது செயல்படும் புவிஈர்ப்பு விசை என்பது அதன் எடை.
* திரவங்களின் கன அளவைக் காண உதவும் கருவி - கொள்கலன்
* வரைப்படத்தாள் முறையில் கண்டறிவது - ஒழுங்கற்ற பொருளின் பரப்பு
* அளவுகோலின் அளவீடுகளை செங்குத்தாகப் பார்க்காததால் தோன்றும் குறை - இடமாறுதோற்றப்பிழை
* கன அளவின் அலகு - மீ3
* திரவங்களின் கன அளவை காணப்பயன்படும் அலகு - லிட்டர்
* காஸ்ட்ரோஸ்கோப்பி செயலாற்றும் இடம் - இரைப்பை
* அதிக நீர் அருந்தும் நிலையின் பெயர் - பாலிடிப்சியா
* கண் லென்சின் ஒளிபுகும் தன்மை குறைபாட்டினால் உண்டாகும் நோய் - கண்புரை
* விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் நிலை - கெரட்டோமலேசியா
* ஐஸ்கிரீம் உருகுதல் எத்தகைய மாற்றத்திற்கு உதாரணம் - இயற்பியல் மாற்றம்
* அடர்த்தி குறைவான பொருள் - வாயு
* கவர்ச்சி விசை அதிகம் கொண்ட ஒன்று - கருங்கல் துண்டு
* மூன்றாம் வகை நெம்புகோல் உதாரணம் - மீன்தூண்டில்
* தெளிவான பார்வைக்கு பொருட்களை வைக்க வேண்டிய குறைந்தபட்ச தூரம் - 25 செமீ
* மின்தடையை அளக்க உதவும் அலகு - ஓம்
* எல்லா வெப்ப நிலைகளிலும் நடைபெறுவது - ஆவியாதல்
* பொருட்களின் நிலை மாறுவது - இயக்கம்
* கடல் நீர் ஆவியாதல் - வெப்பம் கொள்வினை
* நொதித்தல் நிகழ்வின் மோது வெளிப்படும் வாயு - கார்பன் -டை-ஆக்ஸைடு
* கடல் நீரிலிருந்து உப்பைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை - ஆவியாதல்
* எரிமலை வெடிப்பு என்பது - கால ஒழுங்கற்ற மாற்றம்
* உணவு கெடுதல் எவ்வகை மாற்றம் - விரும்பத்தகாத மாற்றம்
* மின்சூடேற்றி இயங்குதல் எவ்வகை மாற்றம் - இயற்பியல் மாற்றம்
* ஊஞ்சல் விளையாட்டில் சுழலும் வீரரின் இயக்கம் - வட்ட இயக்கம்
* இரு நிலைகளுக்கு இடைப்பட்ட குறுகிய தொலைவு - இடப்பெயர்ச்சி
* நியூட்டன்/மீட்டர்2 என்பது - பாஸ்கல்
* அழுத்தத்தை அளவிடப் பயன்படும் வாய்பாடு - விசை/பரப்பு
* துப்பாக்கியில் அழுத்தப்பட்ட சுருள்வில் பெற்றிருப்பது - நிலை ஆற்றல்
* இரசமட்டத்தில் நிரப்பப்பட்டுள்ள திரவம் - ஆல்கஹால்
* அழுத்தத்தை அளக்க உதவும் கருவி - போர்டன் அளவி
* ஒரியான் என்பது - விண்மீன் குழு
* புவிக்கு அருகில் உள்ள வளிமண்டல அடுக்கு - ஸ்ட்ரேட்டோஸ்பியா
* எரிதலை கட்டுப்படுத்தும் வளி மண்டல பகுதிப் பொருள் - நைட்ரஜன்
* புவியின் உள்மையப் பகுதியில் நிலவும் வெப்பநிலை - 1770
* புவியின் வெளி மையப்பகுதியில் ஐந்தில் ஒரு பகுதியில் அடங்கியுள்ள தனிமம் - சிலிக்கன்
* திட்ட அலகு என்பது - SI முறை
* அடி, பவுண்டு, விநாடி என்பது - FPS முறை
* நிலவு இல்லாத கோள் - வெள்ளி
* கோள் ஒன்றினைச் சுற்றி வரும் சிறியபொருளின் பெயர் - நிலவு
* பில்லயன் விண்மீன்கதிர்களின் தொகுப்பு - அண்டம்
* உர்சாமேஜர் என்பது - ஒரு விண்மீன் குழு
* புற ஊதாக் கதிர்களை உறிஞ்சுவது - ஓசோன்
* வேலையின் அலகு - ஜூல்
* 1 குவிண்டால் என்பது - 1000 கி.கி
* தங்க நகைக் கடையில் பயன்படும் தாரசு - மின்னணு தாரசு
* டார்ச் மின்கலத்தில் இருக்கும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* அணு என்பது - நடுநிலையானது
* எலக்ட்ரான் என்பது - உப அணுத்துகள்
* நியூட்ரானின் நிறை - 1.00867 amu
* பொருளின் கட்டுமான அலகு - அணு
* வேலையை அளக்க உதவும் வாய்ப்பாடு - விசை X நகர்ந்த தொலைவு
* கூட்டு எந்திரத்திற்கு எ.கா - மின் உற்பத்தி
*ஆதாரப்புள்ளிக்கும் திறனுக்கும் இடையில் பளு இருப்பது - இரண்டாம் வகை நெம்புகோல்
* பற்சக்கர அமைப்புகளின் பெயர் - கியர்கள்
* நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் - ஆர்க்கிமிடிஸ்
* தனித்த கப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் - முதல் வகை
* கார்களில் உள்ள ஸ்டியர்ங் அமைப்பு எந்த வகை எந்திரம் - சக்கர அச்சு
* பருப்பொருள்களின் நான்காவது நிலை - பிளாஸ்மா
* நெம்புகோலைத் தாங்கும் புள்ளி - ஆதாரப்புள்ளி
* எந்திரங்களில் மிகவும் எளிமையானது - நெம்புகோல்
*ஒரு பொருள் மீது ஒரு விசை செயல்பட்டு அப்பொருளை நகர்த்தினால் அச்செயல் - வேலை
* இரட்டைச் சாய்தள அமைப்பைக் கொண்டது - ஆப்பு
* கம்பளித்துணியில் தேய்க்கப்பட்ட சீப்பு காகிதத்துகளை ஈர்ப்பது - மின்னூட்ட விசை
* பாரமனியில் திரவமாகப் பயன்படுவது - பாதரசம்
* விண்வெளி ஆய்வுநிலையங்களில் மின்சாரம் தயாரிக்க உதவுவது - சூரிய மின்கலம் (சோலார்)
*தாவரங்களில் ஒளிச் சேர்க்கையின் போது சேமிக்கப்படும் ஆற்றல் - வேதி ஆற்றல்
* வீசும் காற்றின் திசை மற்றும் கால அளவைக் காட்டும் வரைப்படம் - Star diagram
பொது அறிவு
* இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர் -டாக்டர் அம்பேத்கார்
* 12வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் எந்த கால கட்டத்திற்குரியது - 2005 – 2010
* இந்தியாவிலிருந்து இலங்கையை பிரிக்கும் ஜலசந்தி - பாக் ஜலசந்தி
* இநதியாவில் பிரிட்டீஷ் உதவியுடன் தொடங்கப்பட்ட இரும்பு எஃகு தொழிற்சாலை - துர்காப்பூர்
* சூப்பர் 301 என்பது - அமெரிக்க வர்த்தகச் சட்டம்
* ஒர் ஆண்டிற்கு ஒரு மனிதனுக்குக் கிடைக்கும் நீரின் அளவில் இந்தியா பெற்றுள்ள இடம் - 133வது இடம்
* உலகிலேயே நிலத்தடி நீரை அதிகமாகப் பயன்படுத்தும் நாடு - இந்தியா
* இந்தியாவில் வன மகோத்சவம் எந்த மாதத்தில் நடைபெறுகிறது - ஜூலை
* தமிழ் நாட்டில் காற்றாலை மின் நிலையம் உள்ள இடம் - ஆரல் வாய்மொழி
உயிரியியல்
* முள்ளங்கியில் காணப்படும் வேர்த்தொகுப்பு - ஆணி வேர்த்தொகுப்பு
* நெல்லில் காணப்படும் வேர்த்தொகுப்பு - சல்லி வேர்த்தொகுப்பு
* முண்டு வேர்கள் கொண்ட தாவரம் - சோளம், கரும்பு
* கொத்து வேர்கள் கொண்ட தாவரம் - டாலியா
* பின்னுகொடி தாவரம் - அவரை
* ஏறு கொடி தாவரம் - மிளகு, வெற்றிலை
* பூண்டின் நறுமணத்திற்குக் காரணம் அதில் உள்ள - சல்பர் உள்ள சேர்மம்
* டெங்கு காய்ச்சலைத் தோற்றுவிக்கும் வைரஸ் - ஃபிளேவி வைரஸ்
* பகலில் கடிக்கும் பழக்கமுடைய கோசு - எய்டஸ்
* தூதுவ ஆர்.என்.ஏ.வில் காணப்படும் ரிபோசோம்களின் தொகுப்பின் பெயர் - பாலிசோம்
* பாக்டீரியா இருசமப் பிளவு முறையில் இனப்பபெருக்கம் செய்கிறது.
* தாவரங்கள் நீரை சவ்வூடுபரவல் முறையில் நீரை உறிஞ்சுகின்றன.
* பூத்தலில் பங்குபெறும் ஹார்மோன் – ஃபுளோரிஜென்f
* இரு சமமான கரங்கலைக்கொண்ட குரோமோசோமின் பெயர் - மெட்டாசென்ட்ரிக் குரோமோசோம்
* டி.என்.ஏ. ஆர்.என்.ஏ.வாக மாற்றப்படும் நிகழ்ச்சி - படியெடுத்தல்
* முழுமையடைந்த கருவுற்ற முட்டை என்பது - சைகோட்
* நெல்லில் காணப்படும் கனி வகை - காரியாப்சிஸ்
* ரோமங்கள் கற்றையாக அமைந்திருக்கும் விதைகள் - கோமோஸ் விதைகள்
* படியெடுத்தலில் பங்கு பெறும் நொதி - ஆர்.என்.ஏ.பாலிமரேஸ்
* மிகப்பெரிய முட்டையினை இடும் உயிரினம் - நெருப்புக்கோழி
* அக்ரோசோமின் முக்கியப் பணி - அண்டத்தினுள் நுழைதல்
* இரத்தச் செல்களை உண்டாக்கும் மூலச் செல்களின் பெயர் - ஹீமோபாயிடிக் செல்கள்
* பாம்புக் கடிக்கு விஷ முறிவு மருந்து தயாரிக்கப்படும் தாவரம் - ராவுல்ஃபியா சர்பன்டைனா (சர்ப்பகாந்தி)
* ஹோமியோபதி மருத்துவத்தின் தந்தை - டாக்டர். சாமுவேல் ஹென்மென்
* 1909ல் வார்மிங் என்பவர் நீர்த் தேவையின் அடிப்படையில் தாவரங்களை எத்தனை வகைகளாகப் பிரித்துள்ளார் - மூன்று
* கிரைசோகிராப் கருவியைக் கண்டுபிடித்த இந்திய அறிவியலறிஞர் - ஜே.சி. போஸ்
* மனிதன் சராசரியாக ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை மூச்சு விடுகிறான் - 16 முதல் 18 முறை
* ஒடு தண்டு தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - புல்
* மனித உடலில் மிகவும் கனமான உறுப்பு - தோல்
* வேம்பிலிருந்து கிடைக்கும் பூச்சிக் கொல்லியின் பெயர் - அஸாடிராக்டின்
* ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி - O இரத்தத் தொகுதி
* எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள் - ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
* முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது - கத்தரி
* பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
* முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - பாம்பு
* இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம் - கழுகு
* பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள் - பாஸ்விடின், லிப்போ விட்டலின்
* மனிதனின் கருவுறுகாலம் - 280 நாள்கள்
* அமீபாவில் காணப்படும் இடம் பெயர்ச்சி உறுப்புகள் - போலிக்கால்கள்
* வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவது - ஹார்மோன்கள்
* புவி நாட்டம் உடையது - வேர்
* இடப்பெயர்ச்சி அடையும் தாவரம் - வால்வாக்ஸ்
* யானையின் கருவுறு காலம் - 17 - 20 மாதங்கள்
* டி.எம்.வி வைரஸினால் தாக்கப்படும் தாவரம் - புகையிலை
* முகிழ்தல் முறையில் இனப்பெருக்கம் செய்வது - ஹைடிரா
* நுண் ஆல்காக்களுக்கு எடுத்துக்காட்டு - கிளாமிடோமானஸ்
* மனிதனின் மலேரியாவை ஏற்படுத்தும் உயிரி - பிளாஸ்மோடியம்
* அனிமாலியாவுக்கு எடுத்துக்காட்டு - மண்புழு
* பன்றியிலிருந்து மனிதனுக்கு உறுப்பு ஒட்டு செய்யப்படுவது - ஜெனோகிராப்ட்
*விலங்கினங்களில் முதன் முதலாகத் தோன்றும் நிணநீர் உறுப்பு - தைமஸ் சுரப்பி
*நடமாடும் மரபுப் பொருள் எனப்படுவது - டிரான்ஸ்போசான்கள்
* இடியோகிராம் என்பது - குரோமோசோம்களைக் குறிக்கும் படம்
* ஆண்களுக்கு செய்யப்படும் நிரந்தர பிறப்புக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை முறை - வாசக்டமி
*தற்காலத்திய தேன் கூட்டில் அமைக்கப்பட்டிருப்பது - 5 அறைகள்
*எலும்புகளில் காணப்படும் குழாய்களின் பெயர் - *ஹாவர்ஷியன் குழாய்
* ஆக்சிஜன் மிக்க இரத்தம் இருக்கும் பகுதி - இடது வெண்ட்ரிக்கிள்
* விலங்குகளின்உடலைச் சுற்றி புறப்பரப்பில் காணப்படும் திசு - எபிதீலியத் திசு
* அசுத்த ரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் - நுரையீரல் தமனி
*மனிதனுக்கு நிமோனியா சளிக் காய்ச்சல் அடினோ வைரசால் ஏற்படுகிறது.
* நம் உடலில் காணப்படும் தசைகள் நம் உடலின் எடையில் பங்கு வகிக்கும் சதவீதம் - 30 சதவீதம்
* நரம்புத் திசுவின் அடிப்படை அலகு - நியுரான்
* சுவாசக் கட்டுப்பாட்டு மையமாக செய்ல்படுவது - முகுளம்
* நிணநீர் சுரப்பிகளில் உருவாவது - லியூக்கோசைட்டுகள்.
* கிரேவின் நோயுடன் தொடர்புடைய சுரப்பி - தைராய்டு சுரப்பி
* மனித ஆண்களின் மூளையின் எடை சுமார் - 1400 கிராம்
* செல்லினைக் கண்டறிந்தவர் - இராபர்ட் ஹூக்
* உட்கருவைக் கண்டுபிடித்தவர் - இராபர்ட் பிரெளன்
*செல் கொள்கையை முன் மொழிந்தவர்கள் - தியோடர் ஸ்ச்வான், ஜேக்கப் ஸ்லீடன்
* பாக்டீரியாவைக் கண்டறிந்தவர் - ஆன்டன் வால்லூவன் ஹூக்
* புரோட்டோ பிளாசத்தைக் கண்டறிந்தவர்கள் - பர்கிஞ்சி, மோல்
* புரோகேரியாட் செல்லிற்கு எடுத்துக்காட்டு - நாஸ்டாக்
* மிகவும் எளிய செல்லமைப்பைக் கொண்ட செல்கள் புரோகேரியாட்டு செல்கள் எனப்படும்
* ஸ்கிளிரென்கைமா லிக்னின் செல்லின் இரண்டாம் நிலை செல்சுவரால் ஆக்கப் பட்டிருக்கிறது.
* பறவைகளின் புறச்சட்டகம் - இறகுகள்
* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
* கழிவு நீக்க மண்டலத்தின் அடிப்படைச் செயல் அலகு - நெஃப்ரான்
* தவளையின் இதயத்தில் காணப்படும் அறைகளின் எண்ணிக்கை - மூன்று
* களைக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் செயற்கை ஹார்மோன் - 2,4-D பீனாக்சி அசிட்டிக் அமிலம்
* கடவுளின் முதற்கோவிலாகக் கருதப்படுவது - காடுகள்
* ஊசியிலைக் காடுகளின் வேறு பெயர் - போரியல் காடுகள்
* புறாவின் விலங்கியல் பெயர் - கொலம்பியா லிவியா
* தக்காளி தாவரத்தின் உயிரியல் பெயர் - லைகோபெர்சிகான் எஸ்குலண்டம்
* தரையொட்டிய நலிந்த தண்டுடைய தாவரத்திற்கு உதாரணம் - ட்ரைடாக்ஸ் (வெட்டுக் காயப்பூண்டு)
* தாவரங்கள் தங்களின் உணவைத் தயாரித்துக் கொள்ளத் தேவைப்படும் வாயு - கார்பன்-டை-ஆக்ஸைடு
* நாள் ஒன்றுக்கு மநித உடலிலிருந்து வெளியேற்றப்படும் சிறுநீரின் அளவு - 1.5 - 2 லிட்டர்
* தவளையின் இரப்பையின் மேற்பகுதியின் பெயர் - கார்டியாக்
* தண்டில் உள்ள சிறுதுளைகளின் பெயர் - லென்டிசெல்
* இலைத் துளையின் இரு மருங்கிலும் அமைந்துள்ளது - காப்பு செல்கள்
* ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு - ஆக்ஸிஜன்
* உழவனின் நண்பன் - மண்புழு
* சிதைப்பவை - காளான்
* உயிர்க்காரணி - பாக்டீரியா
* முதன்முதலில் இரப்பர் தாவரத்தைக் கண்டுபிடித்தவர் -கிறிஸ்டோபர்
* பென்குயின்கள் காணப்படும் வாழிடம் - துருவப் பிரதேசம்
* வரிக்குதிரைகள் காணப்படும் நில வாழிட சூழ்நிலை - புல்வெளிப்பிரதேசங்கள்
* விலங்கு மிதவை உயிரி - ஆஸ்ட்ரோகோடுகள்
* இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - சப்பாத்திக்கள்ளி
* மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் தாவரம் - கீழாநெல்லி
* புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் துலங்கலைத் தரும் தாவரம் - பிரையோஃபில்லம்
* சக்தி தரும் உணவுச் சத்து - கார்போஹைட்ரேட்
* ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்யும் வெள்ளையணு - லிம்ப்போசைட்டுகள்
* வேதியாற்றலை இயக்க ஆற்றலாக மாற்ற உதவும் செல்லும் - தடை செல்கள்
* பெரியம்மையை உண்டாக்கும் வைரஸ் - வேரியோலா வைரஸ்
* நாளமில்ல சுரப்பிகள் ஹார்மோன்களைச் சுரக்கிறது.
* பிறக்கும்போதோ காணப்படும் தைராய்டு குறைப்பு நிலையின் பெயர் - கிரிட்டினிசம்
* இரத்தத்தில் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் திறனைக் குறைப்பது - கார்பன் மோனாக்ஸைடு
* இரத்த உறைவைத் தடுக்க அட்டையின் உமிழ் நீரில் காணப்படும் பொருள் - ஹிருடின்
* கார்பஸ் லூட்டியம் சுரப்பது - ரிலாக்சின்
* பூனை மீன்களின் பொதுவான தமிழ்ப் பெயர் - விரால்
* செயற்கையான சிறுநீரகம் எனப்படுவது - டயலைசர்
* சிறுநீரகத்திற்கு செல்லும் இரத்தத்தின் அளவு விகிதம் - 20 -25 சதவீதம்
* மனித இதயத்தின் பேஸ் மேக்கர் ஆக வேலை செய்யும் பகுதி -எஸ்.ஏ. பகுதி
* சிறுநீரில் காணப்படும் யூரியாவின் அளவு - 2 சதவீதம்
* சிறுநீர்ப்பையில் கற்கள் உருவாகக் காரணம் - புரதம் மற்றும் பாஸ்பேட் குறைந்த உணவை உட்கொள்வதால்
* இத்த சிவப்பு செல்களில் காணப்படும் நிறமி - ஹீமோகுளோபின்
* இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைவதால் உடலில் சேரும் பொருள் - கீட்டோன்கள்
* 51 அமினோ அமிலங்களைக் கொண்ட பாலிபெப்டைடு ஹார்மோன் - இன்சுலின்
* மனிதரில் பிளேக் நோயை உண்டாக்கும் பாக்டீரியா - எர்சினியா பெஸ்டிஸ்
* கருவுறாத அண்டத்தின் வாழ்நாள் காலம் 12-24 மணி நேரம்
* மனித கருப்பையின் உள் அடுக்குச் சுவரின் பெயர் - எண்டோமெட்ரியம்
* கரு உணவு முட்டையின் மையத்தில் காணப்படும் முட்டை வகை - சென்ட்ரோலெசித்தல்
* கொனிடியங்களை உற்பத்தி செய்யும் அமைப்பு - பைலைடு
* கரும்புச்சாற்றில் உள்ள குளுக்கோசின் சதவீதம் - 30 சதவீதம்
* புளோயம் ஒரு கூட்டு திசு
* வேரின் புறவெளி அடுக்கு எபிபிளெமா என அழைக்கப்படுகிறது.
* நரம்பு செல்லின் நீண்ட கிளைகளற்ற பகுதி ஆக்ஸான் எனப்படும்.
* பாரன்கைமா திசு உணவை சேமிக்கின்றது.
* கணிகங்கள் குளோரென்கைமாவில் காணப்படுகின்றன.
* சல்லடைத் தட்டினைக் கொண்ட திசு - புளோயம்
* பகல் நேரத்தில் இலைகளை மேலும் கீழும் இயக்கும் தாவரம் - தந்தித் தாவரம்
* இரத்தம் சிவப்பாக இருக்கக் காரணம் - ஹீமோகுளோபின்
* பறவைகளின் உணவு எங்கு அரைக்கப்படுகிறது - அரைவைப்பை
* கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்
* தொற்றுத்தாவர வேர்களில் காணப்படும் பஞ்சு போன்ற திசு --- வெலாமன்
* மெல்லுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஆக்டோபஸ்
* குழியுடலிகளுக்கு எடுத்துக்காட்டு - ஹைட்ரா
* சைகஸ் - ஜிம்னோஸ் பெர்ம் வகையைச் சேர்ந்தது.
* கிரினெல்லா - சிவப்பு பாசி வகையைச் சேர்ந்தது.
* பாரமீசியம் - சீலியோபோரா வகையைச் சேர்ந்தது
* எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் மருந்து - அசிட்டோதையாமிடின் AZT
* தாவரத்தின் இனப் பெருக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பகுதி - பூக்கள்
* ஆணி வேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்
* பறக்கும் தன்மையற்ற பறவை - ஆஸ்ட்ரிக்
* ஆணி வேர் தொகுப்பு காணப்படும் தாவரம் - புளியமரம்
* ஆணி வேர் மாற்றமடைந்திருப்பது - கேரட்
* விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது - முளைக்குருத்து
* குமிழ்த் தண்டிற்கு எடுத்துக்காட்டு - வெங்காயம்
* மலரின் ஆண் பாகம் - மகரந்தத் தூள்
* வறண்ட நிலத்தாவரம் - சப்பாத்திக்கள்ளி
* தொற்றுத் தாவரம் பற்றி வளரும் தாவரம் ஓம்புயிரி எனப்படும்.
* கோலன்கைமா திசுவில் காணப்படுவது - பெக்டின்
* தாவர உடலம் ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசு ஆகிய இரு வகை திசுக்களைக் கொண்டுள்ளது