பொது அறிவு - 2
1. தமிழ்நாட்டில் யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 5 புராதனச் சின்னங்கள்:
மாமல்லபுரம் கோயில்கள் – காஞ்சிபுரம் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1985)
தஞ்சை பெரிய கோயில் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 1987)
கங்கைகொண்ட சோழபுரம் கோயில் – அரியலூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)
ஐராவதீஸ்வரர் கோயில், தாராசுரம் – தஞ்சாவூர் (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2004)
நீலகிரி மலை ரயில் – நீலகிரி (அறிவிக்கப்பட்ட ஆண்டு 2005)
2. முக்கிய விளையாட்டு அரங்கங்கள்:
சிதம்பரம் விளையாட்டு அரங்கம் – சென்னை
இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் – சென்னை
மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கம் – சென்னை
நேரு உள்விளையாட்டு அரங்கம் – சென்னை
எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் – மதுரை
நேரு விளையாட்டு அரங்கம் – கோயம்புத்தூர்
அண்ணா விளையாட்டு அரங்கம் – உதகமண்டலம்
நேதாஜி விளையாட்டு அரங்கம் – வேலூர்
வ.உ.சி. விளையாட்டு அரங்கம் – சேலம்
பாரதி விளையாட்டு அரங்கம் – நெய்வேலி
3. தி.மு. – தி.பி. என்பது திருவள்ளுவரின் பிறப்பாண்டான கி.மு.31 ஆம் ஆண்டை மையமாகக் கொண்டு கணக்கிடுவதாகும். தமிழறிஞர்களின் முடிவின்படி, கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்னர் திருவள்ளுவர் பிறந்தார் என்று கொண்டு,காலத்தைக் கணக்கிடுவதைத் தமிழக அரசும் ஏற்று அறிவித்துள்ளது.
4. விஜயநகரப் பேரரசின் எழுச்சியும் முடிவும், மதுரைப்பாண்டியரின் வீழ்ச்சியும்,மதுரை நாயக்கர் ஆட்சியின் தோற்றமும் முடிவும், மத்திய காலம் என்ற பகுப்பில் அடங்குகின்றன.
5. கிழக்கிந்தியக் கம்பெனி இந்திய மண்ணில் கால் எடுத்து வைத்தது முதல் தற்காலம்வரையிலான காலப் பகுதியைப் பிற்காலம் எனக் குறிப்பிடுகின்றோம்.
6. தமிழக தலைவர்களின் சிறப்புப் பெயர்கள்:
1. இராஜகோபாலாச்சாரி – மூதறிஞர், இராஜாஜி.
2. ஈ.வெ.ராமசாமி – தந்தை பெரியார், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன்,சுயமரியாதைச் சுடர்.
3. வ.உ.சிதம்பரனார் – வ.உ.சி. கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டு திலகர்,செக்கிழுத்த செம்மல்.
4. காமராஜர் – படிக்காத மேதை, கறுப்பு காந்தி, கர்ம வீரர், கல்வி கண் திறந்தவர்,கிங் மேக்கர்.
5. அண்ணாதுரை – அறிஞர் அண்ணா, பேரறிஞர், தென்னாட்டு பெர்னாட்ஷா,தென்னாட்டு காந்தி.
6. உ.வே.சுவாமிநாத ஐயர் – தமிழ் தாத்தா.
7. திரு.வி.க – தமிழ் தென்றல்
8. சுப்பிரமணிய பாரதியார் – மகாகவி, தேசிய கவி, பாட்டுக்கொரு புலவன், சீட்டுக் கவி.
9. பாரதிதாசன் – பாவேந்தர், புரட்சிக்கவிஞர், புதுமைக் கவிஞர்.
10. கல்கி – தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட், வரலாற்று நாவல் தந்தை.
11. வாணிதாசன் – தமிழ்நாட்டின் வெர்ட்ஸ் வெர்த்.
12. ஜெயகாந்தன் – தமிழ்நாட்டின் மாப்ஸான்.
13. புதுமைப்பித்தன் – சிறுகதை மன்னன்.
14. மு.வரதராசன் – மு.வ.தமிழ்நாட்டு பெர்னாட்ஷா.
15. கி.ஆ.பெ.விஸ்வநாதம் – முத்தமிழ் காவலர்
16. அண்ணாமலைச் செட்டியார் – தனித்தமிழ் இசைக் காவலர்.
17. ம.பொ. சிவஞானம் – ம.பொ.சி., சிலம்புச் செல்வர்.
18. தேசிக விநாயகம் பிள்ளை – கவிமணி.
19. இராமலிங்கம் பிள்ளை – நாமக்கல் கவிஞர், காந்தியக் கவிஞர், ஆஸ்தான கவிஞர்.
20. இரா.பி.சேதுப்பிள்ளை – சொல்லின் செல்வர் (இலக்கியத்தில்).
21. ஈ.வெ.கி.சம்பத் – சொல்லின் செல்வர் (அரசியலில்).
22. அழ.வள்ளியப்பா – குழந்தை கவிஞர்.
23. சிங்கால வேலர் – மே தினம் கண்டவர்.
24. பம்மல் சம்பந்த முதலியார் – தமிழ் நாடகத் தந்தை.
25. சங்கரதாஸ் சுவாமிகள் – தமிழ்நாடகத் தலைமையாசிரியர்.
26. எம்.எஸ்.சுப்புலட்சுமி – இசைக் குயில்.
27. கருணாநிதி – கலைஞர்.
28. எம்.ஜி.ராமச்சந்திரன் – எம்.ஜி.ஆர்., மக்கள் திலகம்.
29. செல்வி. ஜெயலலிதா – புரட்சித் தலைவி.
30. சிவாஜி கணேசன் – நட்கர் திலகம்.
31. எம்.எஸ்.சுவாமிநாதன் – இந்திய பசுமப்புரட்சியின் தந்தை.
7. முக்கிய தலைவர்களின் பிறப்பிடம்:
1. புலித்தேவன் – நெற்கட்டும் செவ்வல்
2. யூசுப்கான் (மருதநாயகம்) – பனையூர் (இராமநாதபுரம்)
3. வீரபாண்டிய கட்டபொம்மன் – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
4. ஊமைத்துரை – பாஞ்சாலங்குறிச்சி (திருநெல்வேலி)
5. மருது சகோதரர்கள் – முக்குளம் (அருப்புக்கோட்டை)
6. தீரன் சின்னமலை – மேலப்பாளையம் (ஈரோடு)
7. வேலுநாய்ச்சியார் – சிவகங்கை
8. பாண்டித்துரை தேவர் – இராமநாதபுரம்
9. வாஞ்சிநாதன் – செங்கோட்டை
10. சுப்பிரமணிய பாரதியார் – எட்டயபுரம் (தூத்துக்குடி)
11. சுப்பிரமணியசிவா – வத்தலகுண்டு (திண்டுக்கல்)
12. வ.வே.சு.ஐயர் – வரகனேரி (திருச்சி)
13. திருப்பூர் குமரன் – சென்னிமலை (அவினாசி)
14. செண்பகராமன் பிள்ளை – திருவனந்தபுரம்
15. தில்லையாடி வள்ளியம்மை – ஜோகன்னஸ்பெர்க் (தென்னாப்பிரிக்கா)
16. இராஜாஜி – தொரப்பள்ளி (கிருஷ்ணகிரி)
17. வ.உ.சிதம்பரனார் – ஒட்டப்பிடரம் (திருநெல்வேலி)
18. விஜயராகவாச்சாரியார் – சேலம்
19. ஈ.வெ.இராமசாமி நாயக்கர் – ஈரோடு
20. சத்தியமூர்த்தி – திருமயம் (புதுக்கோட்டை)
21. திரு.வி.க – துள்ளம் (திருவள்ளூர்)
22. முத்துராமலிங்க தேவர் – பசும்பொன் (இராமநாதபுரம்)
23. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – தேரூர் (கன்னியாகுமரி)
24. வெ.ராமலிங்கம் பிள்ளை – மோகனூர் (நாமக்கல்)
25. பாரதிதாசன் – பாண்டிச்சேரி
26. கு.காமராஜர் – விருதுநகர்
27. சி.என்.அண்ணாதுரை – காஞ்சிபுரம்
28. மு.கருணாநிதி – திருக்குவளை (திருவாரூர்)
29. எம்.ஜி.ஆர் – நாவலப்பிட்டி (கண்டி – இலங்கை)
30. ஜெ.ஜெயலலிதா – மேல்கோட்டை (கர்நாடகா)
31. அப்துல் கலாம் – இராமேஸ்வரம்
32. நேசமணி – கன்னியாகுமரி
33. ஜீவா – கன்னியாகுமரி
34. ம.பொ.சிவஞானம் – சென்னை
35. எம்.எஸ்.சுவாமிநாதன் – கும்பகோணம்
* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.
* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.
* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.
* சிகரங்களில் பெரியதுஎவரெஸ்ட் சிகரம்.
* மலைகளில் பெரியது இமயமலை.
* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.
* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.
* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.
* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.
* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.
* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.
* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.
* மண்புழுவுக்கு ஐந்துஇதயங்கள் உள்ளன.
* மிக வெப்பமான கோள் வெள்ளி.
* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.
* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள்ஆகின்றன.
* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.